உக்ரைனில் உணவு, பணம் இல்லாமல் தவித்து வருவதாக தமிழக மாணவிகள் கண்ணீர்
இந்திய அரசு விமானங்களை ஏற்பாடு செய்து அழைத்து செல்ல வேண்டும் என்று தமிழக மாணவிகள் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளனர்.;
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கானோர் பலியாகி உள்ளனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த 5000 மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதற்கிடையே ஆபத்தான சூழலை எதிர்கொள்ளும்போது கூகுள் உதவியுடன் அருகில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கி கொள்ளுங்கள் என்று உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள தமிழக மாணவிகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். வெடிகுண்டு வெடிப்பதை நேரில் பார்த்தோம், பயமாக உள்ளது என்றும், எந்த ஒரு தகவலும் இல்லாததால் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் உணவு மற்றும் பணம் இல்லாமல் தவித்து வருவதாக தமிழகத்தில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய அரசு விமானங்களை ஏற்பாடு செய்து அழைத்து செல்ல வேண்டும் என்று கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்டுள்ளனர்.