திருவள்ளூரில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அளிப்பதற்காக ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளூரில் மருத்துவக் கல்லூரி வளாகம், கல்யாணகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வானகரம் அப்போலோ மருத்துவமனை வளாகம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை முகாம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு முகாமிலும் 25 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கும் ஒத்திகை நடைபெற்றது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். இந்த முகாமில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்து பார்வையிட்டார்.