கம்பம் தொகுதி வேட்பாளர்கள் சொந்த ஊரில் வாக்களித்தனர்
கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் தங்களது சொந்த ஊர்களில் வாக்களித்தனர்.;
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் தனது வாக்கினை கம்பம் உழவர் சந்தை அருகே உள்ள கம்பம் கள்ளர் துவக்கப் பள்ளியில் பதிவு செய்தார். அதிமுக வேட்பாளர் சையது கான் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
இதேபோன்று அமமுக வேட்பாளர் சுரேஷ் தனது சொந்த ஊரான சின்னமனூர் பகுதியில் உள்ள அண்ணா நினைவு நடுநிலைப்பள்ளியில் வாக்களித்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.