விவசாய கல்லூரி அமைத்து தருவேன் - அதிமுக வேட்பாளர்

Update: 2021-03-25 10:30 GMT
விவசாய கல்லூரி அமைத்து தருவேன் - அதிமுக வேட்பாளர்
  • whatsapp icon

தேர்தலில் தான் வெற்றி பெற்றால் விவசாய கல்லூரி ஆராய்ச்சி மையம் அமைத்து தருவேன் என கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் கூறினார்.

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சையது கான், கம்பம் நகர் பகுதியில் காளியம்மன் கோவில் தெரு, செல்லாண்டி அம்மன் கோவில் தெரு, காந்திநகர், அம்பேத்கர் காலனி ஆகிய பகுதிகளில் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் வாக்கு சேகரித்தார்.அப்போது கம்பம் பகுதியில் விவசாய கல்லூரி மற்றும் விவசாய ஆராய்ச்சி மையம் கண்டிப்பாக தொடங்குவேன் என வாக்குறுதி கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளரை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அதிமுக கம்பம் நகர செயலாளர் ஜெகதீசன், கம்பம் எம்எல்ஏ, ஜக்கையன் மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் போன்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சையது கானுக்கு வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News