கம்பம் - ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொங்கல் பரிசு வழங்கல்

குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2500 ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்வு. ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழங்கி முடித்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன்.

Update: 2021-01-05 03:17 GMT

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பண்டிகையை கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் அரிசி,வெல்லம், முந்திரி,திராட்சை,ஏலக்காய், உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களுடன் முழுநீள கரும்பு மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி தேனி மாவட்டத்தில் 108.92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமுள்ள 517 நியாயவிலைக் கடைகளின் மூலமாக 4,08,385 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக முழு கரும்பு, அரிசி, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் ரூபாய் 2500 ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

தேனி மாவட்ட அளவில் கடந்த வாரம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போடியில் பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகராட்சி,புதுப்பட்டி, கோம்பை, பண்ணைப்புரம், ஓடைப்பட்டி,அனுமந்தன்பட்டி ஆகிய பேரூராட்சிகள், எரசை, அப்பிபட்டி , பூசாரி கவுண்டன்பட்டி,மூர்த்தி நாயக்கன்பட்டி, கோகிலாபுரம், வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை , காமாட்சிபுரம், சுக்காங்கல்பட்டி, முத்துலாபுரம், கன்னிசேர்வைபட்டி, T.சிந்ததலைச்சேரி, தம்மிநாயக்கன்பட்டி, பல்லவராயன்பட்டி ஆகிய ஊராட்சிகள் என ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூபாய் 2500 ரொக்கத்தையும் வழங்கினார்.

பரிசுப் மற்றும் ரொக்கப் பணத்தைப் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஐக்கையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் இளையநம்பி, பி.ஆர்.பி.அழகர்ராஜா, கதிரேசன்,விமலேஷ்வரன் மற்றும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன், கம்பம் நகர செயலாளர் RR.ஜெகதீஸ், மற்றும் ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Similar News