தேனியில் மனித நேய வார விழா

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி மனித நேயத்தை கட்டிக்காத்திட வேண்டும் என தேனியில் நடைபெற்ற மனித நேய வார விழாவில் போலீஸ் எஸ்.பி.பேச்சு.

Update: 2021-01-30 16:31 GMT

 தேனி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறை சார்பில், மனித நேய வார விழா நடைபெற்றது. கம்பம் அருகே உள்ள ஆனைமலையான்பட்டியில் நடைபெற்ற இவ்விழாவில், சமூக நீதி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் தலைமை வகித்தார். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு முன்னிலையில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, பட்டியல் மற்றும்  பழங்குடியினருக்கான நீதிமன்ற அரசு வழக்கறிஞர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பேசுகையில், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றியும், அதற்கான தீர்வு குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டி மனித நேயத்தை கட்டிக்காத்திட வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News