திட்டங்களை கூறி வெற்றி பெற தயாரா ?-ஓ.பி.எஸ்க்கு சவால்

Update: 2021-03-22 05:00 GMT

மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னிலைப்படுத்தி ஓ.பி.எஸ் வெற்றிப் பெறத் தயாராக இருக்கிறாரா என தங்கதமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்கதமிழ்செல்வன் தேனி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அரண்மனைப்புதூர், கோட்டைப்பட்டி, கொடுவிலார்பட்டி, வீருசின்னம்மாள்புரம், நாகலாபுரம், பள்ளபட்டி, சிவலிங்கநாயக்கன்பட்டி, கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் தீவிர செய்தார். கொடுவிலார்பட்டியில் பேசிய தங்கதமிழ்செல்வன்,

தற்போது போடி தொகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தங்கிக் கொண்டு ஊழல் செய்து பணம் சேர்த்து தற்போது 75,000 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். ஊழல் செய்த பணத்தைக் கொண்டு ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் எனத் திட்டமிட்டு வருகிறார். தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், மக்களுக்கு செய்த திட்டங்களை முன்னிலைப்படுத்தி ஓ.பி.எஸ் வெற்றிப் பெறத் தயாராக இருக்கிறாரா என சவால் விட்டார்.

எனவே ஊழல் செய்தவர்களுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. இதை நான் எதிரி என்பதற்காக சொல்லவில்லை. வெற்றி பெற்ற பிறகு நானே ஊழல் செய்தாலும் மக்கள் எனக்கு வாக்களிக்கக் கூடாது. ஊழல் செய்தால் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என அனைத்து அரசியல்வாதிகளும் நினைக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News