எம்.பி.ரவீந்தர் கார் கண்ணாடி உடைப்பு -போடியில் பதற்றம்

தேனி அதிமுக எம்.பி‌ கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் எதிரொலி. திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரின் கார் கண்ணாடியும் உடைப்பு.;

Update: 2021-04-06 16:23 GMT

போடியில் தேனி எம்.பி‌. ஓ.பி‌.ரவீந்திரநாத் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் எதிரொலி. தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் கார் கண்ணாடி உடைப்பு. போடியில் நிலவும் பதற்றம்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெருமாள் கவுண்டன் பட்டி பகுதியில் இன்று தேனி எம்.பி.ஓ.பி‌.ரவீந்திரநாத் உடைய கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.


இதற்கு திமுகவினர் தான் காரணம் என அதிமுகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனி எம்.பி. ஓ.பி‌.ரவீந்திரநாத்-ன் கார் உடைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தேனி மாவட்ட திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி என்பவரின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. போடியில் இருந்து டொம்புச்சேரி சாலையில் பயணம் செய்த வீரபாண்டியின் காரை விசுவாசபுரம் பகுதியில் இருந்த சில மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கண்காணிப்பாளர் (சிறப்பு) ஜெயராஜ், உடைந்த காரை ஆய்வு செய்தார். மேலும் இது தொடர்பாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வியிடமும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றன.

தேனி எம்.பி. ஓ.பி‌.ரவீந்திரநாத்-ன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக திமுக பிரமுகரின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டதால் போடி பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Tags:    

Similar News