திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது - ஓ.பி.எஸ்

Update: 2021-03-29 09:15 GMT

திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகின்றார். இதற்காக நாள்தோறும் தொகுதிக்குட்பட்ட நகர், பேரூர் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரித்து வருகின்றார். இந்நிலையில் சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை தனது தேர்தல் பிரச்சாரத்தை துணை முதல்வர் ஓ.பி.எஸ் துவங்கினார்.

அவர் பேசும் போது, அதிமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். மேலும் வெற்றி பெற்றதும் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மக்களிடத்தில் தேர்தல் வாக்குறுதிகளாக அதிமுக அளித்து வருகிறது. ஆனால் திமுகவோ மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதனை நிறைவேற்றுவதில்லை. இதனால் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத கள்ள நோட்டு போன்றது. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையோ, செல்லுபடியாகும் நல்ல நோட்டு போன்றது .திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என பேசினார்.

Tags:    

Similar News