டீ போட்டு வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

Update: 2021-03-28 07:05 GMT

தேனி மாவட்டம் போடி நகர் பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

போடி திருமலாபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தெருத்தெருவாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் சென்று அருள் தந்தையை சந்தித்து ஆதரவு கேட்டு அவருக்கு மரியாதை செய்தார்.

மேலும் திருமலாபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தங்கதமிழ்செல்வன் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சென்று டீ அருந்தி விட்டு அந்த கடைக்கு வந்த பொது மக்களுக்கு தனது கைகளால் டீ போட்டுக் கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் தங்கதமிழ்செல்வன் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் எம்எல்ஏ, லட்சுமணன் மற்றும் நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News