நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு,மாடு மேய்ப்பது அரசு பணியாக அறிவிக்கப்படும் என அக்கட்சியின் போடி வேட்பாளர் பிரேம் சந்தர் தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் பிரேம் சந்தர் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர்,நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். ஒவ்வொரு மனிதனும் சுயமரியாதையோடு வாழ்வதற்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஆடு மாடுகள் மேய்ப்பது உள்ளிட்ட அனைத்து விவசாய பணிகளும் அரசு பணிகளாக அறிவிக்கப்படும்.
இயற்கை வளங்களை சுரண்டும் மணல் கொள்ளை, மரக்கடத்தல் உள்ளிட்ட கனிம வளங்கள் திருட்டு அனைத்துமே தடுத்து நிறுத்தப்படும். அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி இந்தியாவை சுயமரியாதையோடு வாழ கூடிய தகுதி வாய்ந்த மக்களைக் கொண்ட நாடாக உருவாக்க நாம் தமிழர் கட்சி பாடுபடும் என்று கூறினார்.