"ஓபிஎஸ் - இபிஎஸ்" படங்களுடன் சசிகலா வரவேற்பு போஸ்டர்கள்!

தொடர்ச்சியாக சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வரும் நிலையில்.. இம்முறை சற்று மாறுதலாக ஓபிஎஸ் - இபிஎஸ் படங்களுடன் போஸ்டர் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-02-05 14:54 GMT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், கடந்த சில நாட்களாக சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இன்று ஆண்டிபட்டியில் மரிக்குண்டு முன்னால் ஊராட்சி மன்றத் தலைவரும், எரதிம்மக்காள்பட்டி அ.தி.மு.க கிளைச் செயலாளருமான வேல்முருகன், சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் அடித்து ஆண்டிபட்டியின் முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளார்.

அந்த போஸ்டர்களில், "அ.தி.மு.க'வை வழிநடத்த வரும் பொதுச்செயலாளர் சின்னம்மா" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் போஸ்டர்களில் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News