தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு விதிமுறை மீறலே காரணம் :உலக சுகாதார அமைப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு விதிமுறை மீறலே காரணம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்;

Update: 2021-05-10 09:15 GMT

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியும், குழந்தைகள் நல மருத்துவருமான சவுமியா சுவாமி நாதன், செய்தியாளர்களிடம் கூறியது, 'இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ், பி.1.617 வகையைச் சேர்ந்தது. அதிக வீரியம் உடைய இந்த உருமாறிய வைரஸ், விரைவாக பரவும் தன்மை உடையது. கடந்த ஆண்டு நம் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் வகையை விட, இது பல மடங்கு ஆபத்தானது.

இந்த வகை வைரஸ் குறித்து, அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர். நம் நாட்டில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதற்கு, இந்த வகை வைரசை மட்டும் காரணமாக சொல்ல முடியாது.தொற்று தடுப்பு நடவடிக்கையை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம். கூட்டம் கூடுவதையும், மக்கள் பயமின்றி இயல்பான வாழ்க்கை வாழவும் அனுமதித்தது பெரிய தவறு.

கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என நம்பி, முக கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிடத் துவங்கியதுதான்.' என்று கவலை தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News