பச்சிளம் குழந்தையை வெட்டி துண்டாக்கிய கொடூரம்

Update: 2020-12-26 08:45 GMT

சேலம் சங்ககிரி அருகே பிறந்து சில நாட்களே ஆன அடையாளம் தெரியாத ஆண் குழந்தையை வெட்டி துண்டாக்கி கால் பகுதி மட்டும் உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூர் ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனி பகுதியில் வசிப்பவர் சின்னத்தம்பி( எ) பழனி (80) .இவர் காலையில் தனது ஆடுகளை மேய்க்க சென்றால் பின்னர் மாலைதான் வீடு திரும்புவது வழக்கம். வழக்கம்போல் நேற்று காலை ஆடுகளை மேய்க்க சென்றவர் மீண்டும் மாலை 5 மணிக்கு தனது வீட்டு அருகே ஆடுகளைக் கொண்டுவந்து கட்டும்பொழுது ஆடுகள் கட்டும் இடத்தில் குழந்தையின் கால் பகுதி மட்டும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தேவூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த பாதி சடலத்தை மட்டும் மீட்டு சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் விசாரித்த பொழுது எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை மேலும் இந்த குழந்தை நரபலி காரணமாக இரண்டாக வெட்டப்பட்டு காட்டுப்பகுதியில் வீசி இருக்கலாம் அதனை தெரு நாய்கள் எடுத்துவந்து போட்டிருக்கலாம்? என்றும் அல்லது கள்ளத்தொடர்பால் பிறந்ததால் குழந்தையை வெட்டி வீசி இருக்கலாம்? என்ற கோணங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: