சேலம் : ஆறு பேர் குண்டர் சட்டத்தில் கைது

Update: 2020-12-30 06:15 GMT

சேலத்தில் வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் உள்பட 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம், சின்னமாயாகுளம் பகுதியை சேர்ந்த அருள்மணி என்பவரது மகன் எடிசன் என்பவரை முன்விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்த கோபிநாத் மற்றும் தேவக்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஜாமீனில் வந்தவர்கள் நீதிமன்றம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட உத்திரவிட்டதையடுத்து 24.11.2020-ந் தேதி 5 மணிக்கு சூரமங்கலம் மாலை காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த கோபிநாத்தை அருள்மணி மற்றும் அந்தோணி ஆகியோரின் வழிகாட்டுதலின் போரில் கார்த்திக், ரமேஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் அறிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கார்த்திக், ரமேஷ்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளனர். முதுகுளத்தூரில் சரணடைந்த அருள்மணி , அந்தோணி ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எடிசனின் கொலைக்கு பழி வாங்கவே கோபிநாத்தை கொலை செய்தது தெரிய வந்ததையடுத்து அவர்களும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்த கலைப்புலி ராஜா என்பவர் சிவதாபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் தனது இருசக்கரவாகனத்தில் திருமலைகிரி வழியாக ஓட்டி வந்த போது அவரை வழி மறித்து கத்தியை காட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.9500/-ஐ பறித்துச்சென்ற குற்றத்தின் பேரில் இரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராஜா (எ) கலைப்புலி ராஜா கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் திருச்சி ராஜா மீது பேளுக்குறிச்சி காவல் நிலையம், நாமக்கல் மாவட்டம் மணிகண்டம் காவல்நிலையம் மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது தெரிய வந்தது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாக ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: