நீலகிரியில் ஜப்பான் நிதியுதவியுடன் ரூ. 56 லட்சத்தில் 128 கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்பட்டன.
ஜப்பான் அரசின் அடிமட்ட மனித பாதுகாப்பிற்கு உதவி செய்தல் திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ. 56 லட்சத்தில் 128 கழிப்பறைகள் புதிதாக அமைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி உதகையில் உள்ள ஆர் கே புரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ஜப்பான் தூதரக தூதர் ஒடஹவா ஹாஜிமி கழிப்பறைகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.அவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளா வரவேற்பளித்தார். அதன் பின் பள்ளி ஆசிரியைகளிடம் சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து ஜப்பான் தூதர் மற்ற பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் திறந்து வைத்தார் நீலகிரியில் ஜப்பான் அரசின் நிதி உதவி மூலம் கிராமிய அபிவிருத்தி இயக்கத்தினர் பள்ளிகளில்கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.