கருணாநிதி சிலையை முற்றுகை- பாஜகவினர் கைது

Update: 2021-02-17 09:45 GMT

மதுரை சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி சிலையை முற்றுகையிட்ட பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ சிலையை மதுரையில் அமைப்பதற்கு அனுமதி தர வேண்டும் என திமுக சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து மதுரை மாநகர் பகுதியில் உள்ள சிம்மக்கல் வஉசி சிலை அருகே கருணாநிதிக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலையை வைக்கக்கூடாது என பாஜக வினர் சார்பாக நேற்றைய தினம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இன்று மு க ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறக்க உள்ள சூழ்நிலையில் பாஜக மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திமுக தலைவர் கருணாநிதி உருவ சிலையை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக கைது செய்தனர்.

Tags:    

Similar News