ஏழு பேர் விடுதலையில் மத்திய,மாநில அரசுகள் நாடகம் நடத்துவதாக மதுரையில் வைகோ தெரிவித்தார்.
மதுரையில் மதிமுக சார்பில் நடைபெற்ற நிதி அளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியபோது :தமிழக முதல்வர் 9ஆண்டு காலம் தூங்கிவிட்டு தற்போது அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு வருகிறார். தமிழகத்திற்கு வர வேண்டிய எந்த திட்டமும் வரவில்லை. எனது மகன் இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார். கமல்ஹாசன் திமுக கூட்டணிக்கு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை, முதியவர்களுக்கு தபால் வாக்கு வழங்குவது என்பது சரி தான் என்பது எனது கருத்து.
திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்புகளை துண்டு சீட்டில் எடுத்து கூறி வருகிறார். முதல்வர் இபிஎஸ் போல கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்பது போல கூறவில்லை. 7 பேர் விடுதலை விவகாரம் என்பது மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்தும் கபட நாடகம். இந்த அரசு 10 ஆண்டுகளில் தமிழகத்தை நாசமாக்கியதை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம் என்றார்.