மதுரை ரயில் நிலையம்: குப்பைகளில் தீ பற்றியது

Update: 2021-02-13 11:02 GMT

மதுரை ரயில் நிலையத்தின் வளாகத்தில் அதிகப்படியான பழைய இரும்பு,  பிளாஸ்டிக் மற்றும் காலியான எண்ணெய் டப்பாக்கள் உள்ளிட்ட பொருட்கள் குப்பைகளாக கொட்டப்பட்டிருந்த இடத்தில் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் வெளிப்பட்ட கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவதொடங்கியது. தொடர்ந்து தீயானது மளமளவென அடுத்தடுத்து இடங்களில் பரவ தொடங்கியதை அடுத்து, மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.   தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயினை அணைத்தனர்.

இதனால், அருகாமையில் உள்ள கடைகளில் தீ பரவாதவாரு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் மற்றும் திலகர் திடல் போலீசாரும் தீ விபத்தின் காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு குப்பைகள் மற்றும் பயன்படுத்தபடாத பொருட்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து ரயில் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News