வாங்க மருமகனே வாங்க -வேட்பாளரை வரவேற்ற மக்கள்

Update: 2021-03-25 10:15 GMT

வாங்க மருமகனே வாங்க என 27 வகையான சீர்வரிசைகளுடன் மதிமுக வேட்பாளரை பொதுமக்கள் வரவேற்றனர்.

தேர்தலில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மதிமுக., வேட்பாளராக புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். மதிச்சியம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் வேட்பாளரை தங்கள் வீட்டு மருமகனை வரவேற்பது போல் ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு என மளிகை பொருட்களை வைத்து பூரண கும்ப மரியாதையுடன் மலர் தூவி வரவேற்றனர். அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேட்பாளர் பூமிநாதன் பொதுமக்களை வணங்கி வாக்கு கேட்டார்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, கிராமப்புறங்களில் தங்கள் வீட்டிற்கு வரும் மருமகனை சீர்வரிசை கொடுத்து வரவேற்பது வழக்கம். அதே போல் எங்கள் தொகுதியை மகளாகவும், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரை மருமகனாகவும் நினைத்து தான் 27 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்பளித்தோம்.

வெற்றி பெற்று எங்கள் மதுரை தெற்கு தொகுதி என்ற செல்ல மகளை செல்வ செழிப்புடன் வாழவைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம் என்றனர்.இந்நிகழ்வை தி.மு.க.,மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பொன்முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார். பொறுப்புகுழு உறுப்பினர்கள் பொன்சேது, முகேஷ் சர்மா, ராமலிங்கம், தெற்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மதிச்சியம் வேல்முருகன், 35 வது வட்ட கழக செயலாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News