காடுகளில் விலங்குகளை கொன்று கடத்துவது குறித்து சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

உலகிலேயே சட்ட விரோதமாக விலங்குகளின் விலையுயர்ந்த உறுப்புகளுக்காக கடத்தல்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடைபெறுகின்றன.

Update: 2021-08-02 16:27 GMT

காடுகளில் விலங்குகளை கொன்று கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கில் மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்திய சௌமியா உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழக காடுகளில் வாழும் உயிரினங்களின் பல், தந்தம், ஒடு போன்றவைகளுக்காக வேட்டையாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் சட்ட விரோதமாக விலங்குகளின் விலையுயர்ந்த உறுப்புகளுக்காக நடைபெறும் கடத்தல்கள் அதிகமாக இந்தியாவிலேயே நடைபெறுகின்றன.

இதற்கு இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம். மேலும் காடுகளில் உள்ள அரிய வகை மரங்களானம் சந்தனம், தேக்கு போன்றவை சட்ட விரோதமாக கடத்தப்படுகிறது. காடுகளுக்குள்ளே கஞ்சா செடிகள் வளர்த்து கடத்தப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 2021 ஜனவரி 5-ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ 2 யானையின் தந்தங்கள் ஆகியவை வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் 2020 மே 20-ஆம் தேதி கொடைக்கானல் காடுகளில் கஞ்சா வளர்க்கப்பட்டிருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள, வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்த மத்திய, மாநில அரசு பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.


Tags:    

Similar News