மதுரை மாநகராட்சியின் 69வது புதிய கமிஷனராக கே.பி.கார்த்திகேயன் பொறுப்பேற்பு

மதுரை மாநகராட்சியின் 69 வது புதிய கமிஷனராக கே.பி.கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2021-06-14 07:30 GMT

மதுரை மாநகராட்சியின்கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.பி.கார்த்திகேயன்

மதுரை  மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மிகுந்த தொன்மையும் பாரம்பரியமும், பழமையும் நிறைந்ந மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக பணியாற்ற வாய்ப்பு தந்த தமிழக அரசுக்கு நன்றி.

தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரையில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம், அம்ருத் திட்டங்களை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை பழமையும், தொன்மையும் மாறாமல் நவீன மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை பெற்று மதுரையை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரையை நவீனமயமாக்க திட்டங்கள் வகுக்க அடிப்படை பணிகள் தொடங்கப்படுமமதுரையில் கொரானா பரவல் குறைந்துள்ளது. கொரானா தடுப்பு பணிகள் நல்லமுறையில் சென்று கொண்டுள்ளது. அது தொடர்ந்து செய்யப்படும் எனக்கூறினார்.

Tags:    

Similar News