பூசாரிகளுக்கு கொரோனா நிவாரணம் மதுரையில் அமைச்சர்கள் வழங்கல்
மதுரையில் நிரந்தர வருமானமின்றி தவித்து வரும் கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணங்களை அமைச்சர்கள் வழங்கினர்.;
மதுரை :
மதுரையில் நிரந்தர வருமானமின்றி தவித்து வரும் கோவில் பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணங்களை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பெரியகருப்பன்,மூர்த்தி,பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
மதுரை மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில், பூங்கா முருகன் கோவில் சஸ்டி மண்டபதில் திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண தொகை ரூபாய் 4,000, 10 கிலோ அரிசி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு , ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், உட்பட பலர் பங்கேற்றனர்.