மதுரை மாவட்ட புதிய கலெக்டராக அனீஸ்சேகர் பொறுப்பேற்றார்..
மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன்.;
மதுரை மாவட்டத்தின் 216 வது கலெக்டராகடாக்டர்.அனிஷ்சேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர் மருத்துவர் என்பதும் ,மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்ததும் குறிப்பிடத்தக்கது. பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் அனிஸ்சேகர் :
ஏற்கனவே மதுரை மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்துள்ளதால் மதுரை மக்களின் தேவை அறிந்து அதனை நிறைவேற்றுவேன் ,கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரபடுத்துவேன்,மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை, எடுக்கப்படும், ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதை பின்பற்றுகிறோம்.
ஆக்சிஜன் தான் தற்போதையை கொரோனா பாதிப்பின் மருந்து என்பதால் அதனை உரிய முறையில் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
ஆக்சிஜன் உடனுக்குடன் கொண்டு வர நடவடிக்கை, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது,
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.