கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, பலசரக்கு மளிகை கடைகள் மட்டும் 12 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு காலை 6 முதல் 10 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆங்காங்கே அருகில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
வாகனங்களில் சென்று பொருள்களை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மீறி வாகனங்களில் வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் மேலும் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மதுரை மாவட்டத்தை பொருத்தவரையில் வழக்கம்போல பொதுமக்கள் வாகனங்களில் மதுரையைச் சுற்றி, சுற்றிதான் வருகின்றனர். காவல்துறை பொதுமக்களிடம் கடுமை காட்ட காட்டாத நிலைதான் உள்ளது.
ஆங்காங்கே காவல்துறையினர் மைக் மூலம் தேவையில்லாமல் ஊர் சுற்ற வேண்டாம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் தொற்று ஏற்படும் என அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் இவற்றை மதுரை மக்கள் கண்டு கொள்வதாக தெரியவில்லை. வழக்கம்போல பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுமக்களிடம் கடுமை காட்டும் வகையில் சாட்டையை சுழற்றினால் மட்டுமே ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த முடியும் என தெரிவித்தார்.