காய்கறி விற்பனை விலையில் தவறு ஏற்பட்டால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
மதுரை மாநகராட்சியில் சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்களை ஆய்வு செய்து, காய்கறிகளின் விற்பனை விலையில் ஏதாவது தவறு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி பேட்டி
கொரோனவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும் வகையில் காய்கறி தொகுப்பு ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதனை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் காவல்துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சி காரணமாக நேற்றைய தினம் முழு ஊரடங்கு மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் இருந்து வீடுகளுக்குச் சென்று காய்கறிகள் கொடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை, வியாபாரிகள் சங்கம் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து பலசரக்கு சாமான்களையும் வீடுகளுக்கு சென்ற கொடுக்கும் பணியை துவங்கி செய்து வருகின்றோம். மக்களே சுயக் கட்டுப்பாடு இருப்பதால் கொரோனா தொற்றின் தாக்கம் குறையும், முதல்வர் நினைக்கும் அனைத்தையும் வேகமாக மதுரை மாவட்டம் செய்து வருகின்றது. காய்கறிகளின் விற்பனையில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.