மதுரையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் முதல் கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்
கொரோனா முதல் அலையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை தடுத்தது, தற்போது 2 ஆம் அலை வந்துள்ளது, இதிலிருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது, பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அவசர தேவை என்று வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மதுரை மாவட்டத்தில் அரசு இராஜாஜி மருத்துவமனையில் 25,046 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 1,39,525 பேரும் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என கூறினார்.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் தடுப்பூசி போட வந்த வயதான ஒருவர் நடக்க முடியாமல் சிரமப்பட்ட போது உடனடியாக மருத்துவமனை அதிகாரியை அணுகி சக்கர நாற்காலி மூலம் தடுப்பூசி மையத்திற்கு அமைச்சர் உதயகுமார் அனுப்பி வைத்தார்.