மதுரையில் மாற்றுகட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அமைச்சர் செல்லுார்ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார்ராஜூ கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில் வீரகாளியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரை மாற்றுக் கட்சி மகளிர் 50 குடும்பத்தினர் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சுகந்தி அசோக் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து அவர்களை புன்சிரிப்போடு அதிமுகவிற்கு வரவேற்று மறக்காமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.