காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: மதுரையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
மதுரை டிஆர்ஓ காலனியில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை டிஆர்ஓ காலனி பெரியார் தெருவை சேர்ந்தவர், பெருமாள் - எழிலரசி தம்பதியினரின் மகன் நாகராஜ், (வயது 23). இவர் அப்பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர் . இதனால் மனமுடைந்த நாகராஜ், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து கே .புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார், நாகராஜன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நாகராஜின் பெற்றோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.