குடிக்க மது கேட்டு முதியவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது
மதுரை ஐராவதநல்லூர் பகுதியில், குடிக்க மது கேட்டு முதியவரை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்;
மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 66 ); அதே பகுதியை சேர்ந்தவர் பாண்டி மகன் அஜய் கண்ணன் (வயது 24 ). இவர் அர்ஜூனனிடம் மது வாங்கி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அர்ஜுனன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அஜய்கண்ணன் , முதியவர் அர்ஜுனனை பலமாக தாக்கியுள்ளார் .இதில் காயமடைந்த அர்ஜுனன், இச்சம்பவம் குறித்து தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார், அஜய் கண்ணனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.