மதுரை கீழமாசி வீதியில் ஆசிட் குடித்து இளம்பெண் தற்கொலை
மதுரை கீழமாசி வீதியில் ஆசிட் குடித்த இளம்பெண் பலியானது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை கீழமாசி வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி; இவரது மனைவி சித்ரா தேவி வயது, 38 . இவர் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக 7 ஆண்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவரது கணவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சித்ராதேவி, ஆசிட்டை குடித்து சடலமாக கிடந்துள்ளார். வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி சடலமாக கிடந்ததை அறிந்து, விளக்குத்தூண் காவல் நிலைய போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சித்ரா தேவியின் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தினர்.
கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சித்ராதேவியின் தற்கொலையில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.