நவம்பர் 20, 21 இல் வாக்காளர் சிறப்பு முகாம் ஆட்சியர் தகவல்
நவம்பர் 13 14 -இல் சிறப்பு முகாம் மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்து முடிந்தது
மதுரை மாவட்ட ஆட்சியர் அணியை சேகர் கூறியதாவது 1.1 2022 தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின்படி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் செய்யும் பணி நடக்கிறது. நவம்பர் 13 14 -இல் சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்து முடிந்தது .
இதனையடுத்து சிறப்பு முகாம் நவம்பர் 20 21 -இல் அனைத்து இடங்களிலும் நடத்தப்படுகிறது www.nvsp.in இணையதளத்திலும் வாக்காளர் உதவி ஆன்லைன் அலைபேசி செயலி வாயிலாகவும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் நீக்கல் திருத்தம் அதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் இந்த வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.