மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்
Vijay Fan Made Poster -நடிகர் விஜய் நடித்த படங்களை பார்க்க வேண்டாம் என மதுரை ஆதீனம் பேசியிருந்த நிலையில், அவரை கண்டித்து மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.;
Vijay Fan Made Poster - மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற துறவியர் மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய மதுரை ஆதீனம், "நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும், இதனால் நடிகர் விஜய் நடித்த திரைப்படத்தை யாரும் பார்க்க கூடாது" என பேசியிருந்தார்.
ஆதீனத்தின் இந்த பேச்சு விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில், மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
அதில், "எச்சரிக்கை! மதுரை ஆதினம் மடத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்க திட்டம் போடுறீங்களேயப்பா! நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா?"; "வீண் விளம்பரத்திற்காக பிதற்றுவதை நிறுத்து. எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்ட அன்புக்கு வானமே எல்லை" என்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
மதுரை ஆதீனம் சமீப காலமாக பேசி வரும் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிவரும் சூழலில், தற்போது நடிகர் விஜய் குறித்து தெரிவித்த கருத்தும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2