மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

மதுரையில் திரையுலகின் இணைய விஞ்ஞானி விஜய் என அப்துல்கலாம் புகைப்படத்துடன் சித்தரித்த விஜய் ரசிகர்கள்

Update: 2021-12-21 01:42 GMT

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் திரையுலகின் இளைய விஞ்ஞானி விஜய் என அப்துல்கலாம் புகைப்படத்துடன் சித்தரித்த விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பாக பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது .

மதுரையில் ரசிகர்கள் போஸ்டர்களை வித்தியாசமான வாசகங்களுடன் விவாதப் பொருளாகும் சொற்களுடன் போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையான செய்தியாகும். இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அப்துல் கலாம படத்தோடு விஜய் படத்தை எடிட்டிங் செய்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் பொது இடங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கண்டு அப்பகுதி மக்கள் இளைய சமூகம் பற்று கொள்வது தப்பில்லை? நடிகர்கள் மீது ஆனால் இந்த அளவுக்கு நடிகர்கள் மீதும் வைக்கக்கூடிய பற்றை தனது வாழ்க்கை மீது வைத்து அப்துல் கலாம் கனவை நினைவாக்க நமது இந்தியா வல்லரசு நாடாகும் என்று பொதுமக்களிடையே  பேச்சை எழுப்பிினர்.

Tags:    

Similar News