டிச.29ல் ரேஷன் பொருள் கடத்தலில் பிடிபட்ட வாகனங்கள் ஏலம்

மதுரை ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை டிச.29ம் தேதி ஏலம் விடப்படுவதாக டிஆர்ஓ அறிவிப்பு;

Update: 2021-12-23 16:45 GMT

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி

மதுரை மாவட்டம் பகுதிகளில் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை ஏலம் விடுவதாக மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி அறிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் பொது வினியோக திட்ட உணவு பண்டங்கள் கடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு உரிமை கோரப்படாத 79 வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட்டது . அந்த வாகனங்கள் மதுரை கற்பக நகர் 10வது தெரு வில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

இந்த வாகனங்களுக்கு வரும் டிச.29ம் தேதி பொது ஏலம் விடப்படும்.  அன்றைய தினம் ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 27ம் தேதி காலை 9 மணி முதல் ஒரு மணி வரை மட்டுமே ஏல்  பிணை முறி  தொகை முன்பணம் ரூ 10,000 செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். முன் பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும் . குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகத்தில் நடைபெறும் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் வாகனங்களை நேரில் பார்வையிடலாம் . ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்று அறிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News