எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை தண்டிக்க வேண்டும்: செல்லூர் ராஜு எச்சரிக்கை
தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை விஷமிகள் சேதம் குறித்து தக்க நடவடிக்கை இல்லை என்றால் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய கயவர்களை தண்டிக்க வேண்டும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
மதுரையில் மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:தஞ்சாவூரில் எம்ஜிஆர் சிலையை சில விஷமிகள் உடைத்து இருப்பது கண்டனத்துக்குரியது..அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் தற்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் சிலைகள் சேதப்படுத்துவது போன்ற நிகழ்வுகள் அதிகமாக தலைவிரித்தாடுகிறது.
மேலும் திமுக ஆட்சியில் தற்போது அனைத்து தரப்பிலும் அச்சுறுத்தல் வந்துள்ளது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிலைக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.சில தினங்களுக்கு முன்பு பெரியார் சிலையை சேதப்படுத்தப்பட்டது.தற்போது எம்ஜிஆர் சிலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் விஷமிகளை பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் செல்லுரர் ராஜு.