மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.;
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது, இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில். இங்கு, தைமாதம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஜென்ம நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பாக, திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களுடன் நேர்த்தி கடனை செலுத்தினர். பூஜையில் கலந்து பெண்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.