மதுரையில் நீச்சல் குளத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

மதுரை மாநகராட்சி நீச்சல் குளம் நிரந்தரமாக மூடப்பட்டதா என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது

Update: 2022-03-22 16:45 GMT

பைல் படம்

மதுரையில்  மூடப்பட்டுள்ள  மாநகராட்சி நீச்சல் குளம்  மீண்டும் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை கோடைகாலத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும பொது மக்களுக்கு பெரும் பொழுதுபக்கு வரப்பிரசாதமாகும் நீச்சல் கற்றுக் கொள்ளும் இடமாகவும் திகழ்ந்த மாநகராட்சி நீச்சல் குளம் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மதுரை பகுதியில்  குளங்கள், கண்மாய்கள் நிரம்பி தண்ணீரில் விவசாய கிணறுகளிலும் சிறுவர்-சிறுமிகள் நீச்சல் கற்றனர். தற்பொழுது குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பிய நீர் நிலைகளை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

மேலும் அப்படியே இருந்தாலும் அவற்றின் சுகாதார சீர்கேடும் பாதுகாப்பின்மையும் சிறுவர்களை அங்கு நீச்சல் கற்றுக்கொள்ள பெற்றோர் அனுமதிப்பதில்லை . மேலும் பாதுகாப்பான சூழ்நிலைகளும் இல்லை.இதனால் நகர்ப்புறங்கள் கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் நீச்சல் கற்க வசதியாக உள்ள அமைப்புகள் விளையாட்டு மேம்பாட்டு துறைகள் மூலம் முக்கிய நகரங்களில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த நீச்சல் குளங்களில் பொழுதுபோக்காக சென்று வருவது வழக்கம்.

மதுரை மாநகராட்சியில் காந்தி மியூசியம் அருகே மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நீச்சல் குளத்தில் பெரியவர்களுக்கு ரூ.20  10 ,வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ரூ.10க்கும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.பள்ளி மாணவர்கள் நீச்சல் கற்காத இளைஞர்களுக்கு இந்த மாநகராட்சி நீச்சல் குளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மேலும் கோடை காலங்களில் நீச்சல் பயிற்சி பெறவும், நீச்சலடிக்க வருவதற்கும் அதிகமானோர் ஆவலுடன் திற்ப்பு நாளை எதிர்பார்க்கின்றனர்.

தற்போது தொடங்கியுள்ள கோடை  காலத்தில் நீச்சல் குளத்தில் அதிகமானோர் நீராட வந்து செல்வது வழக்கம்.  காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த நீச்சல்குளம் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்துள்ளது இந்த நீச்சல் குளத்தை நடத்துவதற்கு தனியாருக்கு மாநகராட்சி ஒப்பந்தம் அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.நீ ச்சல் குளத்தில் வருவாய் பார்த்த தனியார் நிறுவனங்கள் அதனை முறையாக பராமரிக்கவில்லை. குளத்தில் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்றி புதிதாக நீரைத் தேக்குவதும் இல்லை.

மேலும் குளத்தின் அடிப்பகுதியில் உடைந்த தரைகளை கூட பராமரிக்காமல் நீச்சல் பயிற்சி பெற வந்த பலர் காயமடைந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் இடையில் அவ்வப்போது குற்றசாட்டுகள் எழுந்ததும் அதை பராமரிக்க நீச்சல் குளம் மூடப்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா காலத்திற்க்கு பிறகு நிரந்தரமாக இந்த மாநகராட்சி நீச்சல் குளம் மூடப்பட்டுள்ளது.அதன்பிறகு தற்போது வரை திறக்கப்படவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கடந்த 2021 ஆம் ஆண்டு 10 லட்சத்திற்கு மாநகராட்சி நீச்சல் குளம் தனியார் ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் விடப்பட்டுள்ளது .தற்போது பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்படுகிறது. பணி நடக்கிறது, மே 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று கூறியதாக சமூக ஆர்வலர்களும், நீச்சல் பிரியர்களும் கூறுகின்றனர். தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் மதுரை மக்கள்  நீச்சல் அடிக்கவும் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கவும் பயனளிக்கும் வகையில்  இந்த நீச்சல் குளத்தை மதுரை மாவட்ட நிர்வாகம்  திறக்க முன்வருமாறு மதுரை  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News