அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய நபர் எந்த அமைப்பையும் சாராதவர்:காவல்துறை விளக்கம்

மதுரை சமூக வலைத்தளத்தில் பேருந்து ஓட்டுனரை தாக்கியவர் பற்றி வந்த தகவல் தவறானது என்று மதுரை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது

Update: 2021-11-24 00:30 GMT

மதுரையில் இன்று அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய நபர் எந்த அமைப்பையும் சாராதவர் என மதுரை காவல் துறை  தகவல்.

தமிழ்நாடு அரசு பேருந்து போக்குவரத்து கழக ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் இவர் ராமேஸ்வரம் முதல் திருப்பூர் வரையான வழித்தட பேருந்து 22ஆம் தேதி என்று அன்று மதுரை தேனி சாலையில் உள்ள மாவட்ட பல்பொருள் அங்காடி அருகே ஓட்டி வரும் போது பேருந்தின் பின்னால் இன்னோவா காரை ஓட்டி வந்த டிரைவர் சுரேஷ் பேருந்தின் இடதுபக்கமாக முந்தி செல்ல முயன்று பேருந்து முன்பக்கத்தில் காரை இடித்துள்ளார்.

இதனால் பேருந்து ஓட்டுநருக்கு காரை ஓட்டி வந்த வருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கார் டிரைவர் சுரேஷ் கண்ணன் பேருநதின்  கண்ணாடியை. சேதப்படுத்தியும் பேருந்து ஓட்டுனரை தாக்கியதில் அவருக்கு வலது கைவிரலில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து  பேருந்து ஓட்டுநர்  எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்து, எதிரி சுரேஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் எதிரியான சுரேஷ் என்பவர் எந்த அமைப்பையும சார்ந்தவர் அல்ல. பேருந்தை முந்திச் செல்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார்.இவ்வழக்கு சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News