மதுரையின் பதட்டமான வாக்குச்சாவடிகள்: மாவட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு

மதுரையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என, மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Update: 2022-01-28 00:15 GMT

மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன்

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை மேலூர், வெள்ளாளப்பட்டி, திருமங்கலம், பேரையூர், தே . கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, எழுமலை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, பறவை, சோழவந்தான் ஆகியவற்றில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து கணக்கெடுத்து,  மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இதுபோன்ற பதட்டமான வாக்குச்சாவடிகள் 100 எண்ணிக்கையில் உள்ளன.

இது குறித்து, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், இதற்கு தேவையான பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டு, அது குறித்து பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது மாவட்ட தேர்தல் அலுவலர் வழங்கும் உத்தரவுகளையும் மாவட்ட காவல்துறை கடைபிடிக்கும் என  தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் பிரச்சாரங்கள், வாக்குச்சாவடிகள் போன்ற இடங்களில் யார் எந்தத் தவறு செய்தாலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News