மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை விற்பனை நிலையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலை விற்பனை செய்ய தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை வர்த்தக கோட்டம் தகவல்
மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்ய தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற திட்டத்தின்கீழ் மதுரையின் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை மதுரை ரயில் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு ரயில்வே வாரியம் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக தகுதியுள்ள தயாரிப்பாளா்கள் மதுரை ரயில்வே கோட்ட வா்த்தக பிரிவில் விண்ணப்பிக்கலாம்.
கைவினை மற்றும் கைத்தறி வளா்ச்சி ஆணையா் அல்லது மத்திய, மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போா், பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வா்த்தக வளா்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளா் ஆகியோா் விண்ணப்பிக்கத் தகுதியுடையவா்கள்.
விருப்ப மனு விண்ணப்பங்களை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூா்த்தி செய்த விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை (மே 6) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வா்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.தகுதி பெற்ற நபா் அல்லது நிறுவனம் தோவு செய்யப்பட்டு மாலை 3.30 மணியளவில் அறிவிக்கப்படும். தேர்வு பெற்ற நிறுவனத்திற்கு மதுரை ரயில் நிலையத்தில் மின்சார வசதியுடன் கூடிய, பயணிகள் பாா்வையில்படும் இடம் 15 நாள்களுக்கு இலவசமாக அளிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு 90038-62967 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளது.