மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இனிப்பு-பலகாரம் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
மதுரை ஜெய்ஹிந்த்புரம் 13 வது தெருவில் உள்ள ஸ்வீட் கடையில் ஏற்பட்ட தீயை விரைந்து அணைத்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு;
மதுரையில் உள்ள ஸ்வீட் கடையில் திடீரென நேரிட்ட தீயை விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெரு 13வது குறுக்கு தெருவில் பாக்யராஜ் இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கும் கடையை நடத்தி வந்தார். இங்கு தயாரிக்கும் இனிப்பு கார வகைகள் கடைகளுக்கு நேரில் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை நான்கு முப்பது மணி இந்த கடையிலிருந்து புகை வெளியேறுவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், அலுவலர் வெங்கடேசன் தலைமையில் இரண்டு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அறிந்த மதுரை மாவட்ட உதவி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து மதுரை ஜெயந்திபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.