தேர்தல் விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மதுரை மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி மாநில அளவில் தேர்தல் விழிப்புணர்வு இணையவழி போட்டிகள் நடக்க உள்ளன
மதுரை தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாநில அளவில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைய வழி போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஒன்பதாம் வகுப்பு ,பிளஸ் டூ மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் 18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பள்ளி வழியாக இப்போட்டியில் பங்கேற்கலாம். போட்டிகள் ;ஓவியம் வரைதல், ஒரு வரி விழிப்புணர்வு, வாசகம்_ பாட்டு, குழு நடனம், மற்றும் கட்டுரை போட்டி போன்ற மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் தவறாது மாணவர்கள் பங்கேற்று பயனடையலாம். போட்டிகள் டிசம்பர் 31 வரை பங்கேற்கலாம். முதல் பரிசு ரூ 5 ஆயிரம் 2-வது பரிசுரூ. 2,300, மூன்றாவது பரிசுரூ. 2000 வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார்.