மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீடு

மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எச்சரிக்கை கீதம் குறுந்தகடு வெளியிடப்பட்டது;

Update: 2022-01-11 04:30 GMT

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் சாக்கிய அறக்கட்டளை இணைந்து உருவாக்கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் எச்சரிக்கை கீதம்- 2 என்ற பாடலின் குறுந்தகடு இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.

இதை மாவட்ட எஸ்பி. வி. பாஸ்கரன் வெளியிட்டு சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சாலை விபத்துகள் நடப்பதை தவிர்ப்பது குறித்தும் உரை நிகழ்த்தினார். அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் 11.01.22 அன்று இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இப்பாடல் வெளியிடப்பட்டது.

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழிபாடுகள் இடம்பெற்று உள்ளது. இப்பாடல்களை முனனவர் திரு.செந்தி லிங்கம் பாடியுள்ளார் மற்றும் பலர் நடித்துள்ளனர், இக்குழுவினர் ஏற்கெனவே மதுரை மாநகர காவல் எச்சரிக்கை கீதம் 1 என்ற தலைப்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News