இறந்த ஒப்பந்த மின் வாரிய ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒப்பந்த மின்வாரிய ஊழியர் உடலை வாங்க மறுத்து ஊழியர்கள் சாலை மறியல்போராட்டம்

Update: 2022-03-25 01:00 GMT

மதுரையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின்  உறவினர்கள்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரையில் இறந்த ஒப்பந்தம் மின்வாரிய ஊழியர் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை பனையூர் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி(32). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் எல்லிஸ் நகர் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தபொழுது அப்போது திடீரென காந்தி மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து எஸ் .எஸ். காலனி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் மின்சாரம் பாய்ந்து இறநத காந்தியின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடிந்து அரசு மருத்துவமனையில் அங்கு திரண்டிருந்த காந்தியின் உறவினர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் காந்தியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உள்ள பனகல் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பொழுது காந்தியின் குடும்பத்திற்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News