குடியரசு தினம் : சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசளித்து பாராட்டு
மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது;
குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதில்,மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 73 காவலர்களுக்கு தமிழக முதல்வர் காவலர்களுக்கான மெச்சத் தகுந்த பணி பணியினைப் பாராட்டி வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தினை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் ஆகியோர் வழங்கினர்.
அதேபோல், மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துணை கண்காணிப்பாளர் உட்பட 24 பேருக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இதில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ததற்காக சமயநல்லூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், மாவட்டத்தில் குடியரசு தின விழாவிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்தற்காக காவல் துணை கண்காணிப்பாளர் (ஆயுதப்படை) விக்னேஸ்வரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.