கால்நடை பராமரிப்புத்துறை நேர்காணலில் மாட்டைபிடி சைக்கிள் ஓட்டு

மதுரையில் நடைபெற்ற கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர் பணிக்கான தேர்வில் சைக்கிள் ஓட்ட தெரிந்தால் 20 மதிப்பெண்

Update: 2022-04-26 16:58 GMT

காட்சி படம் 

கால்நடைப் பராமரிப்பு துறையில் உதவியாளர் பணிக்கான நேர்காணல் மதுரை ஆயுதப்படை மைதானத்தில்  துவங்கியது.

ஐந்து நாட்கள் நடக்கும் நேர்காணலில் பங்கேற்க 6196 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.இதில் பங்கேற்க வேண்டிய 1200 பேரில் 700 பேர் கலந்து கொண்டனர்.

பத்தாவது பெயிலானவர்களுக்கான தேர்வு என்பதால் மாடுகளை கையாள்வதற்கு 20, சைக்கிள் ஓட்டத் தெரிந்தால் 20, நேர்முகத்தேர்வுக்கு 10 என 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

மரத்தில் கட்டியிருக்கும் பசுவை கயிற்றுடன் விடுவித்து அழைத்து சென்று மற்றொரு மரத்தில் கட்ட வேண்டும்.இதே போல மைதானத்தில் சைக்கிள் ஓட்டி காண்பிக்க வேண்டும். இந்த தேர்வில் பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News