நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி
மதுரை நான்கு வழிச்சாலையில் தொடரும் விபத்தை தடுக்கும் விதத்தில் கண்காணிப்பு கேமரா விரைவில் அமலுக்கு (NAHAI) அறிவிப்பு;
மதுரை கன்னியாகுமரி தேசிய நான்கு வழி சாலையில் அதிகரிக்கும் விபத்து அதிவேக வாகனங்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது.
மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள 245 கிலோ மீட்டர் தூர தேசிய நான்கு வழி சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் தினந்தோறும் பல பகுதிகளில் அதி வேகமாக வாகனங்களை இயக்கும் வாகனம்,குடிபோதையில் வாகனங்களை இயக்குவதான் மூலம் விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன.குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழக்கின்றனர்.
சாலையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது.செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது என்பன உள்ளிட்ட காரணங்களால் சாலை விபத்துகள் நேரிடுகின்றன.இந்நிலையில் விபத்தை தடுப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நகாய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள 245 கிலோமீட்டர் தூரம் நான்கு வழி சாலையில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் வேகமாக செல்லும் வாகனங்களை அடுத்த சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படுமென கூறப்படுகிறது.இந்தியாவில் நாள் தவறாமல் சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. விபத்துகளை தடுக்கும் பயண நேரத்தை சேமிக்கவும் பெரும்பாலான நகரங்களுக்கு இடையே தேசிய நான்குவழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் ஆறு வழிச் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகளிலும் பெரிய சிறிய விபத்துக்கள் அன்றாடம் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவிலேயே ஒவ்வொரு ஆண்டும் அதிக விபத்துக்கள் தமிழகத்தில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .இந்நிலையில் தேசிய நான்கு வழிச் சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க (NAHAI) சார்பில் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரையில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நான்கு வழிச் சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மதுரை முதல் கன்னியாகுமரி இடையே மொத்தம் உள்ள கிலோமீட்டர் 245 சாலையில் 295 கேமராக்கள் சென்டர் மீடியன் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைக்கப்படும் . சாலையின் குறுக்கே அமைக்கப்படும் உயரமான வளைவுகளின் மையப் பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும். இந்த கேமராவில் சாலைகளில் உள்ள டிரக்குகளில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீட்டர்,
100 கிலோ மீட்டர் உள்ளிட்டவைகளை தாண்டி மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களின் பதிவு எண் கடந்து செல்லும் வேகத்தின் அளவு உள்ளிட்டவைகளை பதிவு செய்து எந்த இடத்தை எந்த நேரத்தில் கலந்துள்ளது என்ற விவரங்களை துல்லியமாக போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் மண்டல போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிக்கும். இதனை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் அந்த வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
295 அதி நவீன டிஜிட்டல் கேமராக்கள் தவிர மேலும் 153 கேமராக்களும் வாகன போக்குவரத்தையும் சோதனை சாவடிகளில் நடைபெறும் நிகழ்வுகளையும் சாலையில் பழுதாகி நிற்கும் வாகனங்களையும பதிவு செய்யும்.மேலும் நெடுஞ்சாலை ரோந்து காவல் வாகனம் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் .
16 இடங்களில் அமைக்கப்படும் டிஜிட்டல் போர்டியிலும் ஸ்பீடு டிஜிட்டல் கேமரா அதிவேக வாகனத்தை பதிவு செய்து டிஜிட்டல் திரையில் நேரடியாக காட்டும். இந்த வகையில் செயல்படும் இந்த டிஜிட்டல் கேமரா பதிவு மூலம் எந்த நேரத்தில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. எங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது நடைபெற்றுள்ளது. என்பதை உடனடியாக கண்டறிந்து சீரமைப்பு நடவடிக்கை எடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து நடைமுறைகளின் படி அமைக்கப்படும். இந்த கேமரா செயல்பாடு அடுத்த சில மாதங்களில் அமலுக்கு வர உள்ளது என்று (NAHAI)தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.