ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பாசி பயிறு கொள்முதல்: மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பாசி பயிறு கொள்முதல்: விவசாயிகள் பதிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2021-09-30 08:30 GMT

மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பாசி பயிறு கொள்முதல்: விவசாயிகள் பதிவு செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வெளியிட்ட செய்தி குறிப்பு : 

மதுரை மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பாசிப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.72.75-க்கு அக்டோபர் 1 முதல் டிசம்பர்.28-ம் தேதி வரை பாசிப்பயிறு கொள்முதல் செய்ய அரசுஉத்தரவிட்டுள்ளது.அதன்படி திருமங்கலம், உசிலம்பட்டி ஒழுங்குமுறைவிற்பனைக் கூடங்களில் விவசாயிகள் பாசிப்பயிறை விற்பனைசெய்யலாம்.

விருப்பமுள்ளவிவசாயிகள், தங்களது நிலத்துக்கான சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகலுடன் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும்.பதிவு செய்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே பாசிப்பயிறு கொள்முதல் செய்யப்படும் என்றும்                    மேலும் விவரங்களுக்கு திருமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள் 9025152075 என்ற எண்ணிலும், உசிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள்7010280754 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News