தனியார் நிதி நிறுவன காவலாளியின் துப்பாக்கி காணவில்லை: போலீஸார் விசாரணை

மதுரை கரிசல்குளம் பகுதியில் தனியார் நிதி நிறுவன காவலாளியின் துப்பாக்கி காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை;

Update: 2021-12-17 00:00 GMT

மதுரை தனியார் நிதிநிறுவன காவலாளியின் துப்பாக்கி  காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை கரிசல்குளம் ரமணி நகர் முதல் தெருவில் சேர்ந்தவர் காசிராஜன்( 51 ) ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் சம்பவத்தன்று தனது துப்பாக்கியை இருசக்கர வாகனத்தில் தொங்கவிட்டபடி ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, துப்பாக்கியை காணவில்லயாம்  துப்பாக்கி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த காசி ராஜன், கூடல் புதூர் காவல் நலையத்தில் சம்பவம் குறித்து புகார்  அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  துப்பாக்கி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கீழே விழுந்ததா? இல்லை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனரா?  போன்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News